2/3

As-Siraj Play Ground

3/3

As-Siraj Mosque


KM/STR/AS-SIRAJ MAHA VIDYALAYA

Monday, 16 November 2020

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

2020/10/11 ம் திகதி அன்று இடம் பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில்  தோற்றிய  மாணவர்களின் பெறுபேறுகள் 2020/11/15 ம் திகதி அதாவது நேற்று இரவு வெளியானது. 


Km/Str/As-siraj maha vidyalaya த்தில் இருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 3 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக சித்திகளை பெற்றிருப்பதுடன் ஏனைய அனைத்து மாணவர்களும் மிகச் சிறந்த சித்திகளை பெற்றுள்ளார்கள்.


மிகச் சிறந்த பெறுபேறுகளை பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் மாணவர்கள் இச் சிறந்த பெறுபேறுகளை பெற வழிகாட்டியாக இருந்து கல்வி பயின்று கொடுத்த ஆசிரியர்களுக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த பெற்றோர், உறவினர்களுக்கும் Km/Str/As-siraj maha vidyalaya சமூகம் சார்பாக  (பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்கள், வேறு) நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு தரம்  5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இத் தருணத்தில்  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

#வெட்டுப்_புள்ளிக்கு_அதிகமாக_சித்தி_அடைந்த_மாணவர்கள்👇👇👇👇👇


𝐀𝐁𝐃𝐔𝐋 𝐈𝐌𝐓𝐇𝐈𝐘𝐀𝐒 𝐅𝐀𝐓𝐇𝐈𝐌𝐀 𝐒𝐄𝐄𝐑𝐀𝐒 - 𝟏𝟔𝟖


𝐌𝐎𝐇𝐀𝐌𝐄𝐃 𝐑𝐀𝐅𝐄𝐄𝐒 𝐌𝐎𝐇𝐀𝐌𝐄𝐃 𝐙𝐀𝐇𝐑𝐀𝐍 - 𝟏𝟔𝟑


𝐌𝐎𝐇𝐀𝐌𝐄𝐃 𝐀𝐒𝐖𝐄𝐑 𝐌𝐎𝐇𝐀𝐌𝐄𝐃 𝐇𝐀𝐒𝐄𝐄𝐁 - 𝟏𝟔𝟎



Km/Str/As-siraj maha vidyalaya

Wednesday, 19 August 2020

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு ? கல்வி அமைச்சு தீர்மானம்



கோவிட் தொற்று பரவலின் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அனைத்து அரசாங்க மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு
தீர்மானித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இதற்கு அமைவாக மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 200 இற்கு மேற்பட்டதாக இருந்த போதிலும் சுகாதார அமைச்சின் மூலம் வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடித்து மாணவர் எண்ணிக்கை வேறுபாடு மற்றும் தனிநபர் சமூக இடைவெளியை பின்பற்றி பாடசாலைகளை நடத்தமுடியுமாயின் மற்றும் போதுமான வகுப்பறை வசதி மற்றும் ஆசிரியர்கள் இருப்பார்களாயின் மாணவர்களுக்கு கல்வியை வழங்கும் நோக்குடன் இவ்வாறான பாடசாலைகளில் அனைத்து தரங்களுக்கான பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும்
என தெரிவிக்கப்படுகின்றது.

அதற்காக மாகாண செயலாளர்கள் மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், அதிபர்களுக்கு  தேவையான ஆலோசனைகள்  வழங்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, 6 October 2019

சாதனை

 


இன்று வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் கமு/சது/அஸ்- ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் 10மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் பாடசாலைக்கும் வலயத்திற்கும் புகழைத்தேடித் தந்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ், சித்திபெற்ற மாணவர்களுக்கும் உழைத்த ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் . மாணவர் விபரம்...👇👇👇👇

1. KF. LANA 182

2. NF.REESMA 170

3. KRM.APSAL 169

4. ALF.NASKATH SAHEEKA 169

5 IF.ISRIFA 166 

6.MRM.IJAS 162

7.A.USHAMA 156

8FF. SHARAFA 153

9.SF. SAHA 153

10. MTM. ISHAM 153


Km/Str/As-siraj maha vidyalaya

சாதனை

வாழ்த்துக்கள்