2/3

As-Siraj Play Ground

3/3

As-Siraj Mosque


KM/STR/AS-SIRAJ MAHA VIDYALAYA

Wednesday, 19 August 2020

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு ? கல்வி அமைச்சு தீர்மானம்



கோவிட் தொற்று பரவலின் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அனைத்து அரசாங்க மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு
தீர்மானித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இதற்கு அமைவாக மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 200 இற்கு மேற்பட்டதாக இருந்த போதிலும் சுகாதார அமைச்சின் மூலம் வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடித்து மாணவர் எண்ணிக்கை வேறுபாடு மற்றும் தனிநபர் சமூக இடைவெளியை பின்பற்றி பாடசாலைகளை நடத்தமுடியுமாயின் மற்றும் போதுமான வகுப்பறை வசதி மற்றும் ஆசிரியர்கள் இருப்பார்களாயின் மாணவர்களுக்கு கல்வியை வழங்கும் நோக்குடன் இவ்வாறான பாடசாலைகளில் அனைத்து தரங்களுக்கான பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும்
என தெரிவிக்கப்படுகின்றது.

அதற்காக மாகாண செயலாளர்கள் மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், அதிபர்களுக்கு  தேவையான ஆலோசனைகள்  வழங்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்த்துக்கள்